காரசார விவாதத்துக்கு பின் அதிபர்கள் பகிர்ந்த விஷயம் White House showdown|Trump| Zelensky|
அமைதியை விரும்பினால் அவர் திரும்பி வரலாம்! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் வைத்த செக் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக, ஒயிட் ஹவுசில் நடந்த பேச்சுவார்த்தையில், அதிபர் டிரம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே காரசார விவாதம் நடந்தது. தீர்வு எட்டப்படாமல் பேச்சு பாதியில் முடிந்தது. போருக்கு உதவியதற்கு பிரதி உபகாரமாக, உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திடவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின் நடக்க இருந்த விருந்து நிகழ்வு ரத்து ஆனது. ஒயிட் ஹவுசில் இருந்து உக்ரைன் குழுவினர் வெளியேற்றப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அமெரிக்க அதிபர் பதிவிட்டுள்ளார். மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம். மிகப்பெரிய நெருக்கடி இருக்கும்போது, பேச்சுவார்த்தை இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்பது உட்பட பலவற்றை கற்றுக்கொண்டோம். உணர்ச்சிவசப்படும்போது என்ன வெளிவருகிறதோ அது ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்கா இதில் தலையிடுவதால், அதிபர் ஜெலன்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்று தீர்மானிக்கிறேன். ஏனென்றால், பேச்சுவார்த்தையில் எங்களின் ஈடுபாடு அவருக்கு மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும் என்று அவர் உணர்கிறார். எனக்கு அனுகூலம் தேவையில்லை; அமைதிதான் தேவை. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தை ஜெலன்ஸ்கி அவமதித்து விட்டார். அவர் அமைதிக்கு தயாராக இருந்தால் மட்டும் திரும்பி வரலாம் என்று அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிர்ந்துள்ள பதிவில் டிரம்பின் உறவை என்றும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க காங்கிரஸ் ஆதரவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி. குறிப்பாக, 3 ஆண்டுகளாக போர் உச்சத்தில் இருந்தபோதும், உக்ரேனியர்கள் எப்போதும் இந்த ஆதரவை பாராட்டி இருக்கிறார்கள். அமெரிக்க அதிபருடனான எங்கள் உறவு இரண்டு தலைவர்கள் என்ற அளவில் இல்லாமல் அதையும் தாண்டி அதிகமானது. அமெரிக்க மக்கள் எங்கள் மக்களை காப்பாற்ற உதவினார்கள். மனிதர்களுக்கும் மனித உரிமைகளுக்கும்தான் முன்னுரிமை. நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்காவுடன் வலுவான உறவை மட்டுமே விரும்புகிறோம். அது இருக்கும் என்று நம்புகிறோம் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.