உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடிக்கு குஜராத் அரசு செய்யும் சிறப்பு | Women's Day | All-Women Security Cover For PM Modi

பிரதமர் மோடிக்கு குஜராத் அரசு செய்யும் சிறப்பு | Women's Day | All-Women Security Cover For PM Modi

இந்திய வரலாற்றில் முதல் முறையாக....! பிரதமர் பாதுகாப்புக்கு 100 சதவீதம் பெண்கள் மார்ச் 8 - சர்வதேச மகளிர் தின விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சாதனை படைத்த பெண்கள், மார்ச் 8 ம்தேதி தனது சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம் என பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நாளை அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கப் போகின்றனர். அத்துடன் பெண்களை கவுரவப்படுத்தும் வகயைில் இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியும் நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின விழா குஜராத் அரசின் சார்பில் நாளை நடக்கிறது. ஒரு லட்சத்து ஆயிரம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு, முழுக்க முழுக்க பல்வேறு நிலைகளில் உள்ள பெண் போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். 2 ஆயிரத்து 100 காவலர்கள், 187 சப் இன்ஸ்பெக்டர்கள், 61 இன்ஸ்பெக்டர்கள், 16 டிஎஸ்பிக்கள், 5 எஸ்.பி.க்கள், ஒரு ஐஜி, ஒரு கூடுதல் டிஜிபி இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதில் இருந்து நவ்சாரியில் சர்வதேச பெண்கள் விழா முடியும் வரை பெண்களின் பாதுகாப்பு வளையத்தில் பிரதமர் மோடி இருப்பார் என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி