மணமான 2 மாதத்தில் பகீர்: வாழ்க்கையை முடித்த இளம்பெண் | Young woman hema | sex torture | dowry case
கணவன் வீட்டார் கொடுமை தாங்க முடியாமல் திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. ரிதன்யா சம்பவத்துக்கு பிறகு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளை பெண்கள் தைரியமாக தட்டிக் கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரிதன்யாவைப்போலவே இன்னொரு இளம்பெண்ணும் புகுந்த வீட்டு கொடுமைகளை தாங்க முடியாமல் இரண்டே மாதத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியை சேர்ந்த கலியபெருமாள் மகள் ஹேமா(28). எம்பிஏ பட்டதாரி. இவருக்கும் பெங்களுருவில் பணிபுரியும் தஞ்சை மாவட்டம் தாராசுத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் இன்ஜினியர் செல்வமுத்துகுமரனுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூருவில் தனிக்குடித்தனம் நடத்தினர். ேஹமாவின் குடும்பம் கொஞ்சம் கஷ்டப்பட்டதுதான். திருமணத்தின் போது வரதட்சணையாக 10 சவரன் நகை போட்டுள்ளனர். நான் ஒரு இன்ஜினியர். எனக்கு 10 சவரன்தானா? அது போதாது, கூடுதலாக நகை வாங்கி வா என மணமான சில நாட்களிலேயே ேஹமாவை கணவனும், அவர் வீட்டாரும் கொடுமைப்படுத்தியுள்ளனர். ேஹமா நடத்தையின் மீது சந்தேகம் கொண்ட செல்வமுத்துக்குமர கொடுமைப்படுத்தி உள்ளார். ஹேமாவை பெங்களூரு வீட்டில் பூட்டி வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதை பெற்றோரிடம் ஹேமா செல்போனில் கதறி அழுதபடி கூறியிருக்கிறார். இந்த சூழலில் ஆடி மாதத்துக்காக ஜூலை 9ம் தேதி ஹேமாவை பெற்றோர் காரைக்காலுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு ஹேமா கணவருடன் செல்ல மறுத்து விட்டார். அவனுடன் என்னால் வாழ முடியாது: விவாகரத்து வாங்கி கொடுத்து விடுங்கள் என பெற்றோரிடம் கதறியிருக்கிறார். கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை; ஆடையின்றி ஆபாசமாக நடனமாட சொல்லி டார்ச்சர் செய்கிறான் என பெற்றோரிடம் கூறியிருக்கிறார். உடனே ஹேமாவின் பெற்றோர் செல்வமுத்துக்குமரன் பெற்றோரிடம் போனில் விவரங்களை கூறினர். எங்களது மகளை அனுப்ப மாட்டோம்; விவாகரத்து கேட்டு வழக்கு போடப்போகிறோம் என கூறியுள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் போனிலேயே தகராறு ஏற்பட்டுள்ளது. தன் வாழ்க்கையே நாசமாகி விட்டது என, ேஹமா அழுதிருக்கிறார். பெற்றோருக்கும் கஷ்டத்தை கொடுத்து விட்டேனே என அழுதிருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அழுது கொண்டே தூங்கப்போனார். நேற்று காலை நீண்ட நேரம் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்தது அதிர்ச்சியடைந்து கதறினர். கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். திருமணமானது முதல் தனது மகளை செல்வமுத்துக்குமரன் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், ஆடையின்றி ஆபாசமாக நடனமாட கூறி செக்ஸ் டார்ச்சர் செய்து உள்ளதாகவும் ஹேமாவின் பெற்றோர் புகாரில் கூறினர். ஹேமாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தங்கள் மகள் சாவுக்கு காரணமான செல்வமுத்துக்குமரனை கைது செய்யும் வரை ஹேமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என கூறி பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார் வாங்கி தரும்படி மகளை கொடுமை செய்துள்ளார். அப்பா, தம்பி கூட அப்படி இருப்பியா என கேவலமாக பேசியும் ேஹமாவை செல்வ முத்துக்குமரன் டார்ச்சர் செய்திருக்கிறார் எனவும் ேஹமா உறவினர்கள் குற்றம்சாட்டினர்.