தொழிலதிபரிடம் கத்தியை காட்டி தங்கம் கொள்ளை: கோவையில் பரபரப்பு | Crime News | 1 kilo 250 gram gold
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப், 53. தொழிலதிபர். இவர் நகைகளை செய்து நகைக்கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். புதிய நகைகளை செய்வதற்காக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஒன்றே கால் கிலோ தங்கத்தை வாங்கினார். தங்கத்துடன் ஜெய்சன் ஜேக்கப்பும், உதவியாளர் விஷ்ணுவும் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்தனர். இன்று காலை 6 மணியளவில் காரில் திருச்சூருக்கு புறப்பட்டனர். மதுக்கரை அடுத்த க.க.சாவடி செக்போஸ்ட்டை தாண்டி எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயில் அருகே சென்றபோது, காரை ஒரு லாரி வழிமறித்தது. அதில் இருந்து 5 ஆசாமிகள் இறங்கினர். காரின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து காரில் ஏறிக் கொண்டனர். கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி ஜெய்சன் ஜேக்கப்பிடம் இருந்த ஒன்றே கால் கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டனர்.