உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / எவிடன்சுடன் மருமகள் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் | AMMK | Poonamallee Police | Investigation

எவிடன்சுடன் மருமகள் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் | AMMK | Poonamallee Police | Investigation

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சாப்ட்வேர் டிசைனர் அனு பிரியா. வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் பிரவீன் குமாரை காதலித்தார். இரு வீட்டாரின் ஒத்துழைப்போடு சென்ற ஜூனில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பிரவீன் குமாரின் தாய் செல்வகுமாரி, அமமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர். இவர் பெண் வீட்டாரிடம் 100 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ஏழு லட்சம் ரொக்கம், 25 லட்சம் தார் கார் கேட்டதாக கூறப்படுகிறது. 60 சவரன் நகை, கார், ஒரு கிலோ வெள்ளி கொடுத்துள்ளனர். மீதி 40 சவரன் மற்றும் புதிதாக 60 லட்சம் மதிப்பான காரை வாங்கித் தரக் கூறி செல்வகுமாரி அனுப்பிரியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்துடன் அனுபிரியா அவரது கணவர் பிரவீனுடன் மாமியார் மீது பூந்தமல்லி மகளிர் போலீசில் வரதட்சனை கொடுமை புகார் அளித்தார். போலீசும் மாமியாருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி போலீஸ் ஸ்டேஷனில் கடும் வாக்குவாதம் நடந்தது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை