விடுதி சிறுமிகளை வார்டனே பலாத்காரம் செய்த கொடூரம் | Hostel Warden | Sexual harrasement | Andhra
ஆந்திராவின் ஏலூரில் சாமி தயானந்த சேவா ஆசிரமம் என்ற பெயரில் அரசு அனுமதி இன்றி மாணவிகள் தங்கும் விடுதி செயல்படுகிறது. இங்கு ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் பதிவு செய்துள்ள நிலையில் 45 பேர் தங்கியுள்ளனர். 3ம் வகுப்பு முதல் டிகிரி வரை படிக்கும் மாணவிகள் தங்கி பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர். ஆசிரம நிர்வாகிகளால் பண நெருக்கடியால் ஆசிரமத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை கேள்விப்பட்ட யர்ரகுண்டப்பள்ளி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி காப்பாளர் சசிகுமார் ஆசிரமத்தை கைப்பற்ற முடிவு செய்தார். ஆசிரம நிர்வாகிகளிடம் பேசி தானே கவனித்து கொள்வதாக கூறினார். தனது 2வது மனைவியை ஆசிரம வார்டனாக நியமித்தார். மருமகளை பாதுகாவலராகவும் வைத்தார். சசிகுமார் ஆசிரமத்தில் தங்கியுள்ள மாணவிகளிடம் தவறாக நடந்து வந்துள்ளார். பாலியல் சீண்டலை தாங்கிக்கொள்ள முடியாத 3 சிறுமிகள் உட்பட 28 மாணவிகள் நகர் போலீசில் புகார் அளித்தனர்.