உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வெளியான மாணவியின் விவரம்; தமிழக DGPக்கு NCW உத்தரவு Anna university crime| annamalai| NCW| tn DGP

வெளியான மாணவியின் விவரம்; தமிழக DGPக்கு NCW உத்தரவு Anna university crime| annamalai| NCW| tn DGP

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த கொடூரமான செயலை கடுமையாக கண்டிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் அவருடன் நிற்பதாகவும் மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதாக, நடைபாதை பிரியாணி கடை நடத்தி வந்த 37 வயதான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து குற்றங்கள் செய்யும் பழக்கம் உடையவர் என தேசிய மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. முந்தைய வழக்குகளில் அவர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. காவல்துறையின் அந்த அலட்சியம்தான், அவரை இதுபோன்ற குற்றங்களை செய்ய தூண்டி இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என தேசிய மகளிர் ஆணையம் சொல்லி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் BNS சட்டத்தில் 71வது பிரிவை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய ரஹத்கர் (Vijaya Rahatkar) உத்தரவிட்டுள்ளது.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ