போலீஸ் வேனுக்குள் ரவுடிகள் பகீர்-வீடியோ annamalai video | chennai rowdy robert case | police van
ென்னை அண்ணா நகரை சேர்ந்த ராபர்ட், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 16 வழக்குகள் தொடர்புள்ள பிரபல ரவுடி. கடந்த பிப்ரவரி மாதம் ராபர்ட்டை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஏற்கனவே நடந்த கொலை தொடர்பான மோதலில் ராபர்ட் தீர்த்துக்கட்டப்பட்டது தெரியவந்தது. ராபர்ட் கொலை தொடர்பாக 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகளின் காவலை நீட்டிக்க, சென்னை எக்மோர் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்தனர். காவல் நீட்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் போலீஸ் வேனில் சிறைக்கு புறப்பட்டனர். அப்போது வெளியே இருந்த ஒருத்தன் கஞ்சா பொட்டலத்தை, பந்து போல் உருட்டி போலீஸ் வேனுக்குள் இருந்த ரவுடிகளிடம் வீசினான். இதை பார்த்த போலீசார் அந்த நபரை தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த கொலை வழக்கு கைதிகள், தாக்கிய போலீசை அடிக்க பாய்ந்தனர். பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். ‛உன் மூஞ்ச பார்த்து வச்சிருக்கோம் விடமாட்டோம். நாங்களாம் கொலைக்கு மேல கொலை பண்றவங்கணு சொல்லி வேனுக்குள் அடாவடி செய்தனர். அவர்களை போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஓடும் வேனில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை சாடினார். திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள். போலீசில் வேனில் கொண்டு செல்லும் போது, போலீசாரையே ரவுடிகள் மிரட்டி அடிக்கப்பாய்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதை தான் வீடியோ காட்டுகிறது. உண்மையிலேயே இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறி உள்ளார்.