வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றாக வெளுத்து இருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் 4பேர் சேர்ந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலை
கோர்ட் தீர்ப்பு வந்தும் விடாத மக்கள்: கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து வெறியாட்டம் | Ariyalur road protest
அரியலூர், காட்டுப்பிரிங்கியம் அடுத்த பாலக்கரையை சேர்ந்தவர் முத்துவேல். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பேரன் கோகுலுக்கு எழுதி வைத்தார். ஏற்கனவே அவரது நிலத்தின் வழியாக ஊர் மக்கள் சென்று வந்தனர். நிலம் பேரன் பெயருக்கு மாறியதும், அவர் ஊர் மக்கள் தனது இடத்தின் வழியாக செல்வதை தடுத்தார். இதனை எதிர்த்த ஊர் மக்கள் அந்த வழியாக தான் செல்வோம் என்றனர். இது குறித்து கோகுல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனி நபருக்கு சொந்தமான நிலத்தை ஊர் மக்கள் பொது பாதையாக பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு வந்தது. இதையடுத்து தனது இடத்தை சுற்றியும் வேலி அமைத்தார் கோகுல். ஆனாலும் ஊர் மக்கள் விடுவதாக இல்லை. வேலியை அகற்றிவிட்டு அந்த வழியாக தான் செல்வோம் என அறிவித்தனர். ஊர் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் சர்ச்சைக்குரிய பாதையில் பேரணி நடந்தது. பதற்றமான சூழல் நிலவியதால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பை மீறி கோகுலுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட வேலியை ஊர்மக்கள் அடித்து நொறுக்கினர். அவரது வீட்டின் கூரைகளை உடைத்து தரைமட்டமாக்கினர். போலீசார் இதனை தடுக்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ஸ்பாட்டுக்கு வந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன் கோர்ட் உத்தரவு படி நிலம் அதன் உரிமையாளருக்கு சொந்தம். மக்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றார். சமாதானம் பேசியும் விலக மறுத்தவர்களை போலீசார் தரதரவென்று இழுத்து சென்று கைது செய்தனர். #AriyalurClash #CPIMProtest #PoliceVsVillagers #RoadIssueTN #UnauthorizedProtest #TamilNaduNews #CPIMArrest #VillageUnrest #AriyalurProtest #PropertyDamage #TNPoliceAction #MarxistAgitation #PublicRoadDispute #CourtOrderViolation #TamilPolitics
நன்றாக வெளுத்து இருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் 4பேர் சேர்ந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலை