உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பூதாகரமானது ஆன்மிக சொற்பொழிவு பள்ளி ஆசிரியர்கள் தூக்கியடிப்பு! | Ashoknagar | Girls School

பூதாகரமானது ஆன்மிக சொற்பொழிவு பள்ளி ஆசிரியர்கள் தூக்கியடிப்பு! | Ashoknagar | Girls School

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தன்னம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை நடத்திய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, ஆன்மிகம், மறுபிறவி, பாவ, புண்ணியங்கள் பற்றி பேசினார். சிலர் கை, கால், கண் இல்லாமல் பிறக்கிறார்கள். ஏழை, பணக்காரர், குற்றவாளி, ஹீரோ என பலர் பலவிதமாக பிறக்கிறார்கள். போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பலனாகத்தான் இந்த ஜென்மம் தரப்பட்டு இருப்பதாக மகாவிஷ்ணு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, பள்ளியின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், குறுக்கிட்டு அவரது பேச்சை கண்டித்தார். பள்ளியில் பாவ-புண்ணியம், கர்மா பற்றி ஏன் பேசுகிறீர்கள். ஆன்மிகம் பற்றி அரசுப்பள்ளியில் பேசக்கூடாது என கூறினார். ஏன் பேசக்கூடாது? பின் எதற்காக என்னை அழைத்தீர்கள், என்று மகாவிஷ்ணு கேட்க அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மிகம் பேசக்கூடாத என சட்டம் இருக்கா? உங்க CEOக்கு மேல் அறிவு பெற்றவரா நீங்கள்? மறுபிறவி, பாவ-புண்ணியம் பற்றி மாணவர்களுக்கு போதிக்காமல் வாழ்வியலை எப்படி சொல்லித்தர முடியும். நீங்கள் சொல்லி கொடுத்தீர்களா? திருக்குறள், திருவருட்பாவை மேற்கோள்காட்டி பேசுகிறேன் என ஏகத்தும் அந்த ஆசிரியரிடம் மகாவிஷ்ணு வாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை பற்றி பேசிய அமைச்சர் மகேஷ், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி