உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மனைவியை தீர்த்து கட்டிய ஐடி அதிகாரி: பரபரப்பு தகவல்கள் | woman body found in suitcase| bangaluru

மனைவியை தீர்த்து கட்டிய ஐடி அதிகாரி: பரபரப்பு தகவல்கள் | woman body found in suitcase| bangaluru

மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் ராகேஷ் கேடேகர். அவரது மனைவி கவுரி அனில் சம்ப்ரேக்கர். 2 ஆண்டுக்கு முன்தான் திருமணம் நடந்தது. அத்தை மகளான கவரி அனிலை அடம்பிடித்து ராகேஷ் திருமணம் செய்டு கொண்டார். ராகேஷ் ஐடி கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்தார். கடந்த பிப்ரவரியில் இந்த ஜோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொட்டகண்ணஹள்ளி பகுதிக்கு குடி பெயர்ந்தனர். இந்நிலையில் ராகேஷுக்கும், அவரது மனைவி கவுரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் மனைவியை அடிப்பதை ராகேஷ் வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 25ம் தேதி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கோபத்தில் ராகேஷ், வீட்டில் இருந்த கத்தியால், மனைவி கவுரியின் வயிற்றில் குத்தினார். பிறகு, கழுத்தையும் அறுத்தார். இதில் கவுரி பரிதாபமாக இறந்தார்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை