உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கேவி குப்பம் பாஜ பிரமுகர் மர்ம மரணம்: போலீஸ் யார் பக்கம்? | BJP executive dead | K.V.Kuppam

கேவி குப்பம் பாஜ பிரமுகர் மர்ம மரணம்: போலீஸ் யார் பக்கம்? | BJP executive dead | K.V.Kuppam

வேலூர் மாவட்டம், கேவி குப்பம் மேற்கு ஒன்றிய பாஜ கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் விட்டல்குமார் சென்னாங்குப்பம் என்ற இடத்தில் நேற்று சடலமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் இருப்பதால் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என விட்டல்குமார் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் விபத்தில் இறந்ததாக போலீசார் கூறுவதாக விட்டல் குமார் மனைவி ரேவதி குற்றம் சாட்டினார்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை