என்ன நடந்தது பஸ் டிரைவருக்கு? பதற வைக்கும் காட்சிகள் | CCTV | BMTC
பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவராக பணியாற்றி வந்தவர் கிரண்குமார். நெலமங்கலவில் இருந்து தசனபுர டிப்போவுக்கு கண்டக்டர் ஓப்லெஸ் உடன் கிளம்பினார். அப்போது திடீரென கிரணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பில் மோதுவது போல சென்றது. பீதியடைந்த கண்டக்டர் ஓப்லெஸ் உடனடியாக சுதாரித்து கிரணை சீட்டில் இருந்து நகர்த்தி பஸ்சை நிறுத்தினார். கிரண் அருகில் இருந்த ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு இறந்தார். டிரைவர் கிரண்குமாரின் கடைசி நிமிட காட்சிகள் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
நவ 07, 2024