உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இன்ஸ்டா ஐடியை சொல்லு; சிறுமிகளை மிரட்டியவர்கள் கைது Chennai | Boys arrested for threatening with kn

இன்ஸ்டா ஐடியை சொல்லு; சிறுமிகளை மிரட்டியவர்கள் கைது Chennai | Boys arrested for threatening with kn

சென்னையை சேர்ந்த 16 மற்றும் 15 வயது சகோதரிகள் 2 பேர், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர், நடுவழியில் சிறுமிகளை வழிமறித்து அவர்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டியை கேட்டுள்ளனர். அவர்களின் அணுகுமுறையால் ஆத்திரமடைந்த சிறுமிகள், அந்த சிறுவர்களை திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அப்போது அவர்கள் கத்தியை காட்டி, யாரை திட்டுற? பார்த்து பேசிக்க? என்கிற ரீதியில் சிறுமிகளை மிரட்டிவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இது பற்றி சிறுமிகளின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவியை ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில், கொளத்தூரை சேர்ந்த 16, 13 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். சிறுவர்களுடன் இருந்த ரெட்டேரியை சேர்ந்த கனிஷ்கர் என்பவர்தான் கத்தியை காட்டி மிரட்டியது தெரிந்தது. சிறுவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். கனிஷ்கரை போலீசார் தேடுகின்றனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !