அட்டகாசம் செய்த புல்லட் யானை பிடிபட்டதால் பந்தலூர் மக்கள் நிம்மதி | Bullet elephant caught
அட்டகாசம் செய்த புல்லட் யானை பிடிபட்டதால் பந்தலூர் மக்கள் நிம்மதி | நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரம்பாடி, பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளில் புல்லட் என்ற ஒற்றை ஆண் யானை தனியாக உலா வந்தது. சத்துணவுக்கூடங்கள், ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தொடர்ச்சியாக சூறையாடியதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்றது. கடந்த ஒரு மாதத்தில் 35க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்ததால் அப்பகுதி மக்கள் பகுதி மக்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தூங்க முடியாமல் அச்சத்தில் இருந்தனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் வனத்துறையினர் கடந்த 17ம் தேதி முதல் யானையை கும்கி யானைகள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அதையும் மீறி புல்லட், வீடுகளை இடித்ததால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.