சேலம் சங்ககிரி அருகே பயங்கர விபத்து | Salem | Accident | Omni Bus
சென்னையில் இருந்து 31 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் கோவை நோக்கி வந்தது. சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டூவிலர் குறுக்கே வந்தது. டூவிலர் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் அசோக் சடன் பிரேக் பிடித்து ஓரமாக திருப்பினார். இருந்தும் டூவீலர் மீது மோதிய பஸ் நிலை குலைந்து தலைகுப்புற கவிழ்ந்து ரோட்டில் உரசியபடி சென்றது. இதனால் தீ பொறி கிளம்பி பஸ் முழுக்க பற்றி எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பஸ் கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்தது. உள்ளே இருந்த 20 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பஸ் மோதியதில் டூவீலரில் வந்த பெரியசாமி ஸ்பாட்டிலேயே இறந்தார். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.