உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மரத்தில் மோதி சின்னா பின்னமான கார் | Car Accident | Police investigation | News | Tindivanam

மரத்தில் மோதி சின்னா பின்னமான கார் | Car Accident | Police investigation | News | Tindivanam

ென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். பைக் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஞாயிறன்று தாய், தந்தை, மனைவி, 2 மகள்கள், சகோதரி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு கிளம்பினார். சாமி கும்பிட்டு மீண்டும் குடும்பத்தாருடன் ஸ்கார்பியோ காரில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை வெங்கட் ஓட்டி வந்தார். இரவு 9 மணி இருக்கும் திண்டிவனம் அடுத்த தென்பசார் பஸ் ஸ்டாண்டு அருகே சென்னை டு திருச்சி ஹைவேஸில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே பைக்கில் வந்த ஒருவர் சாலையை கடக்க முற்பட்டு உள்ளார். பைக்கில் மோதாமல் இருக்க வெங்கட் சடன் பிரேக் அடித்து உள்ளார். பைக்கில் உரசி அருகே இருந்த மரத்தின் மோது அதிகவேகமாக கார் மோதி உள்ளது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பைக்கில் வந்த தென்களவாய் பகுதியை சேர்ந்த செல்வம் காயங்களுடன் தப்பினார். வெங்கட் குமாரின் தந்தை கோவிந்தராஜ், வயது 55, தாய் திருப்பாவை,48, மனைவி கல்பனா 30 ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வெங்கட், 2 மகள்கள், சகோதரி, அவரது கணவர் என 5 பேர் பலத்த காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவர்களை மயிலம் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை கீழாய் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய காரால் அப்பகுதியில் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். #CarAccident | #Policeinvestigation | #News | #Tindivanam

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !