உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மகன் வாங்கிய கடனால் ரோட்டில் தந்தைக்கு சோகம் | CCTV | Mettupalayam | Police arrest

மகன் வாங்கிய கடனால் ரோட்டில் தந்தைக்கு சோகம் | CCTV | Mettupalayam | Police arrest

கோவை மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், வயது 47. இவரது மகன் கார்த்திக் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். வேல்முருகன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆதிராமடைந்த கார்த்திக் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிவிட்டு தலைமறைவானார். வீட்டுக்கு வந்தே நீண்ட நாள் ஆனதாக கூறப்படுகிறது. கார்த்திக் வாங்கிய கடனை திருப்பி தராததால் கடன்கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டுக்கு வந்து கேட்டனர். என் மகன் கார்த்திக் இங்கு வருவதில்லை. கடன் வாங்கியது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என கூறி அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை