உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பட்டப்பகலில் மாணவிக்கு அதிர்ச்சி தந்த இளைஞன் | CCTV | Theft | Chennai

பட்டப்பகலில் மாணவிக்கு அதிர்ச்சி தந்த இளைஞன் | CCTV | Theft | Chennai

ென்னை வேப்பேரியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் மருத்துவ கல்லூரி மாணவி தங்கி படித்து வந்தார். கடந்த 22ம் தேதி வேப்பேரி பூந்தமல்லி ரோட்டில் நடந்து சென்றார். போனில் பேசிக்கொண்டே போன மாணவியை ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். திடீரென அவரது செல்போனை பறித்துவிட்டு ஓடினான். இதை சற்றும் எதிர்பாராத மாணவி திருடன்.. திருடன் என கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள் திரண்டனர். அதற்குள் செல்போனை பறித்த இளைஞன் மின்னல் வேகத்தில் தப்பினான். செல்போன் திருட்டு குறித்து வேப்பேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மாணவியின் செல்போனை பறித்து தப்பியது கடலூர்காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த இளையராஜா என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவனை போலீஸார் செல்போன் மூலம் டிரேஸ் செய்து கண்டுபிடித்தனர். சுற்றிவளைத்து கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையின் போது காதலிக்காக தான் திருடினேன் என இளையராஜா கூறினான். அவனது காதலி சென்னை வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக மாதத்துக்கு இருமுறை இளையராஜா சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தான். இந்த முறை வந்தபோது காதலிக்கு செல்போன் பரிசளிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அவனிடம் புது செல்போன் வாங்க தேவையான பணம் இல்லை. வழிப்பறி செய்து அதன் மூலம் காதலிக்கு புது செல்போன் வாங்கி கொடுக்கலாம் என திட்டமிட்டு மாணவியின் செல்போனை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை