/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மதுரை கவுன்சிலர் அடாவடி: தடுத்தவர்களுக்கு அடி உதை | Madurai | Thirumangalam municipality councillor
மதுரை கவுன்சிலர் அடாவடி: தடுத்தவர்களுக்கு அடி உதை | Madurai | Thirumangalam municipality councillor
திருமங்கலம் நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் காசி பாண்டி. திமுகவைச் சேர்ந்தவர். திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பலகார கடை நடத்தும் ஆறுமுகத்துக்கும் கவுன்சிலர் காசிபாண்டிக்கும் நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காசிபாண்டி பலகார கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த இனிப்பு, போண்டா, முறுக்கு என மொத்த தின்பண்டங்களையும் தூக்கி வீசி நாசப்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். தடுக்க வந்த வியாபாரிகளை அடித்து விரட்டினார்.
நவ 11, 2024