பாமக நிர்வாகியை ஓட ஓட வெட்டி சாய்த்த பயங்கரம் | chengalpattu pmk vasu case | crime news | anbumani
ெங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வாசு. பாமக மாவட்ட துணை செயலாளரான இவர், அன்புமணியின் தீவிர ஆதரவாளர். காட்டாங்குளத்தூர் ஒன்றிய சேர்மனாகவும், பட்ரவாக்கம் பஞ்சாயத்து தலைவராகவும் முன்பு பதவி வகித்தவர். தனியார் நிறுவனங்களுக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யும் தொழிலும், கேட்டரிங் சர்வீசும் நடத்தி வந்தார். இளந்தோப்பு பகுதியில் தான் தண்ணீர் எடுக்கும் ஒரு பகுதிக்கு காரில் நண்பருடன் சென்றார். வழக்கம் போல் காரை டிரைவர் ஓட்டினார். காரை நிறுத்தி விட்டு நண்பருடன் சேர்ந்து வாசு மது அருந்த ஆரம்பித்தார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த 2 பேர் அவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். உடனே வாசு, அவரது நண்பர், டிரைவர் மூன்று பேரும் யார் என்று பார்க்க முயன்றனர். அப்போது மறைந்திருந்த 2 பேர் அரிவாளுடன் ஓடி வந்தனர். இதனால் வாசு உள்ளிட்ட 3 பேரும் சிதறி ஓடினர். வாசுவை மட்டும் குறிவைத்து துரத்திய கும்பல், அவரை ஓட ஓட சரமாரியாக வெட்டியது. அப்படியே சரிந்து விழுந்த வாசு, சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். வாசுவின் நண்பரும், டிரைவரும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாசு உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களையும் சேகரித்தனர். அந்த ஏரியாவில் சிசிடிவி கேமரா இருக்கிறதா என்றும் சோதனை செய்து வருகின்றனர். வாசு மீது வழக்குகள் ஏதும் இல்லை என்கின்றனர். பாமக இரண்டாக உடைந்த பிறகு, அன்புமணி பக்கம் இருந்த வாசு, வேகமாக வளர ஆரம்பித்தார். இதனால் அரசியல் போட்டி காரணமாக இருக்குமா என்று போலீசார் விசாரிக்கின்றனர். அதே போல் அவர் பெரிய அளவில் நடத்தி வந்த குடிநீர் சப்ளை தொழிலில் போட்டி இருந்திருக்கலாமோ என்றும் சந்தேகம் உள்ளது. வாசுவுக்கு கடைசியாக வந்த செல்போன் அழைப்புகளையும் சேகரித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார். வாசு கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வாசு செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர். பாமகவில் பொறுப்பில் இருக்கிறார். ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மனாகவும் இருந்தவர். இவ்வளவு செல்வாக்கு பெற்றவரை பட்டப்பகலில் கொலை செய்து இருக்கின்றனர். அப்படி என்றால் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது என்று பாருங்கள் என அன்புமணி சாடினார். சமீபத்தில் தான் மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மக ஸ்டாலினை வெடிகுண்டு வீசி கொலை செய்ய பார்த்தனர். அவர் பாமக மற்றும் வன்னிய சங்கத்தின் முக்கிய புள்ளி. ராமதாஸ் ஆதரவு அணியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். அவரை கொலை செய்ய நடந்த முயற்சி தமிழகத்தையே அதிர வைத்தது. இப்போது பாமகவின் இன்னொரு நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ChengalpattuPMKVasuCase #PMKMakaStalinCase #CrimeNews #Anbumani #PMKIssue #TamilNaduCrimeNews #TamilPolitics #JusticeForVasu #PoliticalUpdates #TamilNaduJustice #BreakingNews #VasuCaseUpdates #AnbumaniCase #ChengalpattuNews #StalinCase #CrimeInTamilNadu #PoliticalDebate #JusticeForAll #CurrentEvents #TamilNadu政治