அண்ணாநகர் சிறுமி சம்பவம்: வெளியான பரபரப்பு தகவல்கள் | Anna Nagar | Chennai | Admk | Sudhakar
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தச்சிறுமி ஆறாம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தாயார் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றர். அவர் சில பரிசோதனைகளை எடுத்தார். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்பதை டாக்டருக்கு கண்டுபிடித்தார். உடனே அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மகளை தாய் அழைத்துச் சென்றார்.