நகை திருடிய ஊராட்சி தலைவி: திமுகவை கிழித்த அண்ணாமலை | DMK |
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டார். திருமணம் முடிந்ததும் தனியார் ஏசி பஸ்சில் ஏறி, கோயம்பேட்டில் வந்திறங்கினார். பஸ்சை விட்டு இறங்கியபோது, 4 சவரன் நகை வைத்திருந்த பர்சை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். வரட்சுமியின் அருகே பஸ்சில் ஒரு பெண் வந்து உட்கார்கிறார். வரலட்சுமி தண்ணீர் பாட்டில் வாங்க இறங்கிய ஒரு சில நிமிடங்களுக்குள் பேக்கில் கைவிட்டு பர்சை அந்தப் பெண் தூக்குகிறார். பஸ் கிளம்பும் சமயத்தில் அந்தப்பெண் கீழே இறங்கிச் சென்று விடுகிறார்.
செப் 06, 2025