குடோனில் பயங்கர தீவிபத்து ஏரியாவை சூழ்ந்த கரும்புகை
சென்னை அண்ணாசாலை, GP ரோட்டில் உள்ள கேஆர் காம்ப்ளக்ஸில் வாகன உதிரிபாகங்கள் கடை உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. காம்ப்ளக்ஸின் மாடியில் உள்ள உதிரிபாகங்கள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோன் முழுவதும் தீ பரவியதால், அந்த இடத்தையே கரும்புகை சூழ்ந்தது. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். #ChennaiFire #GodownFire #FireIncident #GoodsDestroyed #ChennaiNews #FireSafety #DisasterManagement #PropertyLoss #EmergencyResponse #LocalNews #GBroad #annasalai #chennai #breakingnews
ஏப் 02, 2026