சென்னையில் விடிய விடிய கொட்டிய கன மழை | Chennai rain | ChennaiStorm | ChennaiWeather |
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை ஏர்போர்ட், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி இறந்தார். ரோட்டில் தேங்கியிருந்த வெள்ளத்தில் மின்சார கேபிள் அறுந்து கிடந்துள்ளது. அதில் கால் வைத்த போது வரலட்சுமி இறந்தது தெரியவந்தது. நகரின் பல பகுதிகளில் இது போல வெள்ளம் தேங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 209 மில்லிமீட்டர் மழை பதிவானது. அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.