/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சென்னைக்கு சென்ற பணியாளர்களை தடுத்த போலீஸ் | Coimbatore hospital Sanitary workers protest
சென்னைக்கு சென்ற பணியாளர்களை தடுத்த போலீஸ் | Coimbatore hospital Sanitary workers protest
கோவை அரசு மருத்துவமனையில் 250 மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் வேலை பார்த்ததற்கான தொகை தூய்மை பணியாளருக்கு இன்னும் வரவில்லை. ஒரு பணியாளருக்கு 1 லட்ச ரூபாய் நிலுவைத்தொகை உள்ளதாக, பணியாளர்கள் கூறுகின்றனர். பல கட்டமாக போராட்டம் நடத்தியும் பலன் இல்லாத நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க 57 பேர் பணியாளர்கள் சென்னைக்கு ஒரு பஸ்சில் நேற்றிரவு புறப்பட்டனர்.
ஆக 25, 2024