/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கஞ்சா வழக்கில் வெளியே வந்தவர் தப்பி ஓட்டம்! | Crime | Madurai Police | Usilampatti
கஞ்சா வழக்கில் வெளியே வந்தவர் தப்பி ஓட்டம்! | Crime | Madurai Police | Usilampatti
மதுரை உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 40.உசிலம்பட்டி போலீசில் கான்ஸ்டபிள். இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தார். இரவு பணிமுடித்து திரும்பிய முத்துக்குமார் இன்று மதியம் முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே தனது நண்பர்களுடன் பொன்வண்டு என்ற நபர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். கஞ்சா வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த அவருக்கு முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
மார் 27, 2025