உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நோயாளிகள் | Dindigul Private Hospital Fire | Dinamalar News

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நோயாளிகள் | Dindigul Private Hospital Fire | Dinamalar News

திண்டுக்கல் மாவட்டம், திருச்சி சாலையில் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட மருத்துவமனையில் திடீரென தீ விபத்து மின்கசிவு காரணமாக கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தீ மருத்துவமனையில் மற்ற இடங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. நோயாளிகள் அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து அங்கிருந்தவர்களை வெளியே அழைத்து வந்தனர். இந்த தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் இறந்தனர். தீக்காயம் அடைந்த 28 பேர் வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மின்சாரம் தடைபட்டதால் லிப்டில் இருந்த 6 பேர் பாதியில் சிக்கிகொண்டனர். அவர்களும் மீட்கப்பட்டனர். 50க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். கலெக்டர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்த்தனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை