உள்ளே தெரியும் வகையில் கழிவறை கதவு அமைத்த அவலம் | Mayiladuthurai |Panchayat| ToiletDoorToile
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கோமல் ஊராட்சியில் 42.65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கிராம செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் மெய்யநாதன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் அமைந்துள்ள ஊராட்சி தலைவர் அலுவலக கழிப்பறை கதவுகள் முறையாக அளவு எடுக்காமல் அமைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெளியில் நின்று பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் தெரியும் வகையில் 2 இன்ச் இடைவெளியுடன் கழிப்பறை கதவு பொருத்தி இருப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. (பிரத்) கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யும் வரை இதைக்கூட கவனிக்காாத அதிகாரிகளின் அலட்சியம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.