உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஈரோடு அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சோகம் | Erode | Father | Police

ஈரோடு அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சோகம் | Erode | Father | Police

ஈரோடு மொடக்குறிச்சி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமார். தனியார் வாட்ச்மேனாக உள்ளார். இவரது மனைவி பாண்டிசெல்வி. தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஒன்றரை வருடத்துக்கு முன் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆரம்பத்தில் இருந்தே பாண்டிசெல்வி நடத்தை மீது குமார் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பெண் குழந்தையை குமார் பாதுகாப்பில் கொடுத்த பாண்டிசெல்வி ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஈரோடு அரசு ஆஸ்பிடலுக்கு சென்றார். அப்போது பாண்டிசெல்வியை செல்போனில் அழைத்த குமார் குழந்தை மூச்சு பேச்சின்றி இருக்கிறது அருகில் உள்ள ஆஸ்பிடல் அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது என்ற தகவல் வந்துள்ளது. இதனால் பாண்டிசெல்வி அதிர்ச்சி அடைந்தார்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை