ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வராததால் சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர் C.Vijayabaskar|former health
புதுக்கோட்டை, விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. நேற்று சாலை விபத்தில் காயமடைந்த ஒருவர், இங்கு அழைத்துவரப்பட்டார். டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க தாமதம் ஆனது. இதை அறிந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அங்கு சென்றார். இடது கையில் எலும்பு முறிவால் அவதிபட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். விஜயபாஸ்கர் கூறும்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்களுக்கான பணியிடம் இருந்தும் சிகிச்சை அளிக்க ஒருவர் கூட இல்லை. நோயாளிகளின் உயிர்காக்கும் உயரிய நேரத்தை அரசு மருத்துவனைகள் தவறவிடுகின்றன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருப்பதாக கூறினார்.