வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதனால் அவளுக்கு என்ன பலன் என்பதை எழுதுங்கள்
5 முறை உணவில் கலந்து கணவன் கதை முடித்த பாசக்கார மனைவி | Dharmapuri Couple | Police Investigaion
தர்மபுரி, அரூர் அடுத்த கீரைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரசூல், வயது 43. இவரது மனைவி அம்முபி வயது 35. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த சூழலில் 5ம் தேதி இரவு ரசூல், வீட்டில் சாப்பிட்டு விட்டு துாங்கிய நிலையில் அவர் உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவர், 11ல் சேலம் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். பிளட் டெஸ்டில் பூச்சி கொல்லி மருந்து கலந்தது தெரிய வந்தது. உணவு மூலம் இது கலந்து இருக்கலாம் என்பதால் மனைவி மீது ரசூலுக்கு சந்தேகம் வந்தது. தன் தம்பி மனைவியிடம், மனைவியின் போனை சோதனை செய்யுமாறு கூறியுள்ளார். அதில் அம்முபி வாட்சப்பில் பேசிய ஆடியோ ஒன்று சிக்கியது. கீரைப்பட்டியில் சலுான் கடை நடத்தி வருபவர் லோகேஸ்வரன் வயது 26. அவரிடம், நீ கொடுத்த மருந்தை என் கணவருக்கு மாதுளை ஜூசில் கலந்து கொடுத்தேன் என அம்முபி கூறி இருந்தது பகீர் கிளப்பியது.
அதனால் அவளுக்கு என்ன பலன் என்பதை எழுதுங்கள்