பெண் அதிகாரியை தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை | DVAC arrested Coimbatore
கோவை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கடந்த மே 31ம் தேதி ஓய்வு பெற்றார். கிராஜுவிட்டி தொகையை பெற கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகம் சென்றார். ஏ.ராஜா என்ற அதிகாரியை அலெக்சாண்டர் அணுகினார். கிராஜுட்டி தொகையை விடுவிக்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார், ராஜா. அரசு பள்ளி ஆசிரியர்கிட்டயே லஞ்சம் கேட்கறீங்களே நியாயமா? என அலெக்சாண்டர் கேட்க, யாரா இருந்தாலும் இங்க வெட்டுனாதான் நடக்கும் என ராஜா கூறினார்.
செப் 25, 2024