உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாகனின் உறவினரையும் தாக்கிய திருச்செந்தூர் யானை தெய்வானை | Elephant attack | Bagan and relative died

பாகனின் உறவினரையும் தாக்கிய திருச்செந்தூர் யானை தெய்வானை | Elephant attack | Bagan and relative died

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை. தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் இந்த யானையை பாகன் உதயகுமார் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று மதியம் கோயில் வளாகத்தின் அருகே கொட்டகையில் நின்றுகொண்டிருந்த தெய்வானை யானைக்கு பாகன் உதயகுமார் பழம் கொடுக்க சென்றுள்ளார். அவருடன் உறவினர் சிசுபாலனும் இருந்துள்ளார். பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த யானை திடீரென திமிறி உள்ளது. அடுத்த நொடியே ஆக்ரோஷமடைந்து அருகில் இருந்த பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தாக்கி உள்ளது. யானை மிதித்ததில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பாகன் உதயகுமார் திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். யானை ஆக்ரோஷமடைந்து தாக்குவதை பார்த்த பக்தர்கள் பீதி அடைந்து ஓடினர். கோயில் ஊழியர்கள் நீரை பீய்ச்சி அடித்து யானையின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினர். யானை மிதித்து இருவர் இறந்த சம்பவம் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. யானை கட்டப்பட்டு இருந்த கொட்டகையில் என்ன நடந்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். யானை தெய்வானைக்கு எதனால் ஆக்ரோஷம் ஏற்பட்டது என்பது குறித்து கால்நடை மருத்துவக்குழுவும் பரிசோதனை செய்து வருகிறது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை