ஆபீஸ் வேலையால் நடந்த பதற வைக்கும் சம்பவம் | EY death case | Pune office
கேரளாவை சேர்ந்தவர் அன்னா செபாஸ்டின், வயது 26. கடந்த மார்ச்சில் சிஏ எனப்படும் ஆடிட்டர் படிப்பு முடித்தார். புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்குள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். ஜூலை 20 அன்று ஹாஸ்டலுக்கு சேர்வாக வந்த செபாஸ்டின் தூங்க சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட வரவில்லை. ஹாஸ்டல் தோழிகள் அவரது ரூமுக்கு சென்று பார்த்த போது செபாஸ்டின் எழுந்திரிக்கவில்லை. அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு ஆஸ்பிடலுக்கு போனார்கள். ஆனால் மாலை பெட்டில் படுக்க செல்லும் போதே செபாஸ்டின் இறந்தது தெரிய வந்தது. ஆரம்பத்தில் தற்கொலையாக இருக்கலாம் என்றெல்லாம் கூட போலீசார் சந்தேகப்பட்டனர்.
செப் 20, 2024