சென்னையில் பரபரப்பு சம்பவம்: கஞ்சா கும்பல் சிக்கியது | GANJA OIL | CHENNAI | POLICE
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்தவர் ஶ்ரீராம். வயது 21. ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவரது தாய் பாக்கியலட்சுமி, தொலைபேசி மூலம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது மகன் ஏதோ ஒரு போதைப் பொருளை கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறான். அதை சாப்பிட்டவுடன் அவனது நடவடிக்கைகள் சரி இல்லை எனக் கூறியுள்ளார். போலீசார் உடனே ஸ்ரீராம் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் உள் அறையில் 630 மி.லி கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு 1.50 லட்ச ரூபாய். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். ஸ்ரீராம் கொடுத்த தகவலின் பேரில் எம்.கே.பி நகரை சேர்ந்த பர்வேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.