கஞ்சா கடத்தலுக்கு உதவிய கறுப்பு ஆடுகள் சிக்கியது எப்படி | Ganja | Police Arrest
கோவை ராமநாதபுரம் போலீசார் சமீபத்தில், கஞ்சா வியாபாரிகள் கணேஷன், முத்துக்குமார் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு சப்ளை செய்யப்படும் தகவல் தெரிந்தது. அதன் அடிப்படையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை மொத்தமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். கஞ்சா வரும் வழியை லாக் செய்து பிடிக்க முயன்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் கஞ்சா கடத்தல்காரர்கள் ரூட்டை மாற்றி போலீசிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகினர். போலீசாரின் திட்டத்தை தெரிந்து கொண்டே அவர்கள் தப்பித்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த கோணத்தில் போலீசார் விசாரித்தனர். அப்போது, தங்களுக்குள்ளேயே 2 கறுப்பு ஆடுகள் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. கான்ஸ்டபிள்கள் ரவிசேகர், மாயசுதாகர் ஆகிய இருவரும் போலீசாரின் திட்டங்களை அவ்வப்போது கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ரகசியமாக தெரிவித்து அவர்களை காப்பாற்றி வந்துள்ளனர். அதற்கு பிரதிபலனாக லஞ்சம் பெற்றதும் அம்பலமானது. கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததை அவர்களின் செல்போன்கள் காட்டி கொடுத்துள்ளன. கான்ஸ்டபிள்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.