உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / SSI சம்பவத்தில் வெளியே வந்த பகீர் தகவல் Gudimangalam ssi case | ssi shanmugavel | tirupur encounter

SSI சம்பவத்தில் வெளியே வந்த பகீர் தகவல் Gudimangalam ssi case | ssi shanmugavel | tirupur encounter

அதிமுகவை சேர்ந்த மகேந்திரன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எம்எல்ஏவாக இருக்கிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. தோட்டத்தை பராமரிக்க திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி வயது 65, அவரது மகன் மணிகண்டன் வயது 30 ஆகியோரை எம்எல்ஏ நியமித்து இருந்தார். 5 ஆண்டுகளாக இவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் மூர்த்தியின் இன்னொரு மகன் தங்கப்பாண்டி வயது 25 என்பவரும் தோட்டத்துக்கு வந்தார். அப்போது அப்பா, மகன்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. மகன்கள் 2 பேரும் சேர்ந்து அப்பா மூர்த்தியை கொடூரமாக தாக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சண்டையை பிரிக்க முயன்றனர். அப்போது அப்பா, மகன்கள் 3 பேரும் சேர்ந்து கொண்டனர். போலீசாரை தாக்க ஆரம்பித்தனர். இதில் எஸ்எஸ்ஐ சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிப்போட்ட இந்த கொடூர கொலை சம்பவத்தில், அப்பா மூர்த்தி, மகன் தங்கபாண்டியன் சரண் அடைந்தனர். மணிகண்டன் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் எங்கே என்று கேட்டனர். கொலை நடந்த இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஓடையில் மறைத்து வைத்திருப்பதாக மணிகண்டன் சொன்னார். அவர் சொன்ன இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து கொடுக்க சென்ற மணிகண்டன், கணப்பொழுதில் போலீசை தாக்கி விட்டு தப்ப முயன்றார். அவர் அரிவாளை எடுத்து வெட்டியதில் எஸ்ஐ சரவணகுமார் காயம் அடைந்தார். தப்பி ஓட முயன்ற மணிகண்டனை சக போலீசார் சுட்டனர். சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இந்த என்கவுன்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் போலீஸ் அதிகாரிகள் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ