உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மும்பையை புரட்டி போட்ட பேய் மழை: முடங்கிய போக்குவரத்து | Heavy Rain | Mumbai

மும்பையை புரட்டி போட்ட பேய் மழை: முடங்கிய போக்குவரத்து | Heavy Rain | Mumbai

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மும்பையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. நேற்று மாலை 5.30க்கு துவங்கிய கனமழை இரவு முழுதும் நீடித்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், மும்பை மாநகர் வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதிகபட்சமாக மன்குர்தில் 27.6 செமீ மழையும், காட்கோபரில் 27.4 செமீ மழையும் கொட்டி தீர்த்து. பவாயில் 25 செமீ மழை, அந்தேரியில் 19 செமீ, மரோலில் 17 செமீ, வடாலா, சயான் பகுதிகளில் 14 செமீ மழையும் பெய்தது. சென்ட்ரல் மற்றும் வெஸ்டர்ன் லைன்களில் புறநகர் ரயில் சேவை பெரிதும் பாதித்தது. மும்பை ஏர்போர்ட் ரன்வேயில் மழைநீர் தேங்கியதால், முக்கிய நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ