துப்பாக்கியுடன் வீடு புகுந்து நகை அள்ளிய பர்தா கொள்ளையர்கள் | CCTV-யில் பரபரப்பு காட்சி
நாகர்கோயில் வேதநகரை சேர்ந்தவர் உமர்பாபு வயது 53. வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். லீவுக்கு ஊருக்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி இருக்கும், உமரின் மனைவி ஜாஸ்மின், அவரது மகள், மாமியார் மருத்துவமனைக்கு சென்றனர். உமர் மட்டும் இருந்தார். அப்போது பர்தா போட்ட 5 பேர் வீட்டுக்கு வந்தனர். யார் என்று உமர் விசாரித்தார். நாங்கள் உங்கள் சொந்தக்காரர்கள் தான் என்று ஒருவர் பதில் சொன்னார். அடுத்த விவரம் கேட்பதற்குள், ஒருவர் வேகமாக துப்பாக்கியை நீட்டினார். இன்னொருவர் பையில் இருந்து அரிவாளை எடுத்தார். முகத்தை மறைத்த துணியை ஒவ்வொருவராக விலக்கினர். ஒருவர் மட்டும் தான் பெண். மற்ற 4 பேரும் ஆண்கள். சத்தம் போட்டால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர். உமர் பயந்துவிட்டார். அவரை மாடிக்கு அழைத்து சென்றனர். வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டினர். படத்தில் வருவது போல் சேரில் உட்கார வைத்து கை, கால்களை கட்டினர். 5 பேரும் பிரிந்து அறைகளில் நகை, பணத்தை தேடினர். ஒரு பீரோவில் 20 பவுன் சிக்கியது.