உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மனைவியை தீர்த்துக்கட்டிய முன்னாள் ராணுவ வீரரை தூக்கியது போலீஸ் | Husband attacked wife | Andhra

மனைவியை தீர்த்துக்கட்டிய முன்னாள் ராணுவ வீரரை தூக்கியது போலீஸ் | Husband attacked wife | Andhra

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தெலங்கானாவின் ஐதராபாத் மேட்சல்லை சேர்ந்த வெங்கட மாதவியை 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் ஐதராபாத் ஜில்லெலகுடாவின் நியூ வெங்கடேஸ்வரா காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். குருமூர்த்தி ஐதாராபாத் கஞ்சன்பாக்கில் உள்ள டிஆர்டிஓவில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக குருமூர்த்திக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சங்கராந்தி பண்டிகைக்காக தனது பிள்ளைகளை மேட்சலில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை