கமிஷனர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர்மல்க பேட்டி | Husband complaint against wife | Crime
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பிசினஸ்மேன். ஐ.டி.துறையில் வேலை பார்த்த அசோகாதேவி என்ற பெண்ணை காதலித்து 2017ல் திருமணம் செய்தார். ராமநாதபுரம் பகுதியில் வாழ்க்கையை துவங்கினர். அசோகாதேவிக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி அவரை விட்டு பிரிந்து விட்டார். தன்னை 2வதாகத்தான் கல்யாணம் செய்துள்ளார் என்ற உண்மை திருமணமான ஓரிரு ஆண்டுகளில் செந்தில்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், அதை நம்பாமல் அசோகாதேவியிடம் கேட்டார். குட்டு அம்பலமானதால் அசோகாதேவியும் திருதிருவென விழித்தார். தன் தவறை மறைக்க கணவனை அடித்து கொடுமைப்படுத்த துவங்கினார். கணவரின் தாய், பாட்டியையும் அசோகாதேவி கொடுமைப்படுத்த துவங்கினார்.