உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 2 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலை மீட்பு | Idol Recovery | Temple Idol | ancient idol

2 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலை மீட்பு | Idol Recovery | Temple Idol | ancient idol

தஞ்சாவூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே பழங்கால சிலையை கடத்தி செல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தஞ்சை மேலதிருவிழாபட்டி அருகே நடந்த வாகன தணிக்கையில் சந்தேகத்துக்கு உரிய 2 பைக் மற்றும் 1 கார் சிக்கியது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், கும்பகோணத்தை சேர்ந்த ராஜ்குமார், திருவாரூரை சேர்ந்த தினேஷ், ஜெய்சங்கர், கடலுார் விஜய் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோக பெருமாள் சிலையை கைப்பற்றினர். தினேஷ் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சிலை கிடைத்தது. யாரிடமும் சொல்லாமல் மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்தார். அவரது மறைவுக்கு பிறகு சிலையை கைப்பற்றிய தினேஷ் அதை விற்க முயன்றார்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி