உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 5 பயங்கரவாதிகள் பதுங்கல்: காஷ்மீரில் வேட்டை தீவிரம் Indian Army JK police 2 terrorists eliminated

5 பயங்கரவாதிகள் பதுங்கல்: காஷ்மீரில் வேட்டை தீவிரம் Indian Army JK police 2 terrorists eliminated

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்புப்பணியை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரிலுள்ள பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டார் எல்லை வழியாக Gurez sector of Bandipore பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என காஷ்மீர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில், ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லை பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, 2 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை எச்சரிக்கும்விதமாக, பாதுகாப்புப்படையினர் சுட்டனர். ஆனால், பாதுகாப்புப்படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். சிறிது நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளையும் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை