தரை இறங்கியதும் விமான ஊழியரிடம் பயணிகள் வாக்குவாதம்
திருப்பதி ஏர்போர்ட்டில் இருந்து ஐதராபாத்துக்கு நேற்றிரவு இன்டிகோ விமானம் கிளம்பியது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட்கள் கண்டறிந்தனர். தரை இறக்கப்படுவதாக அறிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வானத்திலேயே வட்டமடித்த விமானம், மீண்டும் திருப்பதி ஏர்போர்ட்டிலேயே பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர். உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாததால், விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.
ஜூலை 21, 2025