இஞ்ச் பை இஞ்சாக ஜிப்மரை அலசிய நிபுணர்கள் | Jipmar Hospital | Bomb threat
இஞ்ச் பை இஞ்சாக ஜிப்மரை அலசிய நிபுணர்கள் | Jipmar Hospital | Bomb threat புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பிடலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; அது இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என ஆஸ்பிடலின் அலுவலக இமெயிலுக்கு நண்பகல் 12 மணி அளவில் மிரட்டல் வந்தது. ஜிப்மர் ஆஸ்பிடலி்ன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் புதுச்சேரி சீனியர் எஸ்பி சைதன்யாவிற்கு தகவல் கொடுத்தார். ஆஸ்பிடலுக்கு விரைந்த போலீசார் ஆஸ்பிடலில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர். அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டது. மோப்ப நாய்கள் டோனி மற்றும் ராம் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜிப்மர் ஆஸ்பிடல் ஜல்லடை போட்டு தேடினர். மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, நிர்வாக அலுவலகம், அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என எல்லா இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.