நன்றி சொல்ல போன இடத்தில் நடந்த பஞ்சாயத்து | Jothimani | Cong Mp | Karur
கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி சொல்ல, கோடாங்கிபட்டிக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். அப்பகுதி பெண்கள் ஜோதிமணிக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். பதிலுக்கு ஜோதிமணியும் ஆரத்தி எடுத்த பெண்கள் கையில் இருந்த குழந்தைகளை கொஞ்சுவதும், ஆரத்தி எடுத்த பெண்களின் கன்னத்தை கிள்ளுவதும் என மாறி மாறி பாச மழை பொழிந்து உறவாடினர். ஆனால் இந்த நிகழ்வு சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. நிலைமை அப்படியே மாறியது. ஆரத்தி எடுத்த பெண்கள் எல்லாம் அடுக்கடுக்காக ஜோதிமணியிடம் தங்கள் பகுதி குறைகளை கூறினர். அனைவரின் குறைகளையும் கேட்ட ஜோதிமணி அனைத்தையும் சரி செய்து விடுவதாக தலையை ஆட்டியபடி மைக்கை பிடித்து நன்றி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் ஆரத்தி எடுத்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் ஜோதிமணியை விடாமல், கோடாங்கிபட்டி பாலம் கட்டாதது பற்றி ஆவேசமாக பேசினார்.