கரூர் தவெக பிரசாரத்தில் பங்கேற்ற பலர் கவலைக்கிடம் | TVK | Karur TVK
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இரவு 7.20 மணியளவில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நெரிசல் அதிகமாகி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை தவெக நிர்வாகிகள் தூக்கி சென்றனர். அவர்களை மீட்பதற்காக ஆம்புலன்சுகள் வரிசையாக வந்தன. எனினும், கூட்ட நெரிசலால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை பிரசார பகுதியில் இருந்து ஆஸ்பிடல் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. விஜய் பிரசாரத்தை முடித்து கிளம்பிய நிலையில் கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் ஆஸ்பிடல் நோக்கி வந்த வண்ணம் உள்ளன. நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 10 பேர் மரணம் அடைத்தனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அமைச்சர்கள் சுப்ரமணியம், மகேஷ், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவித்துள்ளார். #TVKCampaign #VijaySpeech #KarurRally #TamilagaVettriKazhagam #VijayPolitics #MakkalSandhippu #TN2026Elections #ActorVijay #TVKVijay #KarurEvent #VijayTour #TamilNaduPolitics