குலை நடுங்க வைக்கும் வயநாடு நிலச்சரிவு காட்சிகள் | Wayanad Land slide
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை மிரட்டி வருகிறது. வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணி நடக்கும் போதே மேப்படி மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் நிவாரண முகாமாக செயல்பட்ட பள்ளி, வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சூரல்மலையில் உள்ள பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுதான் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல ஒரே வழியாகும்.
ஜூலை 30, 2024