திடுக்கிட வைத்த வடகொரிய அதிபரின் செயல் | Kim Jong Un | 30 officials execution | north korea flood
உலக அளவில் சர்வாதிகார தலைவராகவும், சர்ச்சை நாயகனாகவும் திகழ்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். தடாலடியாக அவர் செய்யும் காரியம் சர்வதேச அளவில் அடிக்கடி பேசுபொருள் ஆகி விடுகிறது. இப்போதும் அப்படி தான் பதற வைக்கும் காரியத்தை சர்வ சாதாரணமாக செய்து சர்ச்சையை சம்பாதித்து இருக்கிறார் கிம் ஜாங் உன். அதாவது, கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 40 ஆயிரம் வீடுகள் இடிந்தன. 15 ஆயிரம் வீடுகள் இருந்த தடம் தெரியாமல் புதைந்தன. நிலச்சரிவு பாதித்த இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். பெண்கள், குழந்தைகள், முதியோர் என 15,400 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிலச்சரிவு நடந்த பகுதிகளை சீரமைக்கும் பணி துவங்கியது. எல்லா பணியும் முடிய சில மாதங்கள் ஆகும் என்று அதிபரிடம் அதிகாரிகள் கூறினர். நிலச்சரிவு ஸ்பாட்டில் ஆய்வை முடித்த பிறகு தான் அதிர்ச்சி முடிவை எடுத்தார் அதிபர். இவ்வளவு பெரிய பேரிழப்புக்கு கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் தான் காரணம் என்று அதிபர் குற்றம் சாட்டினார். இறுதியாக கடமை தவறியதாக 30 அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் சிலர் ஊழல் செய்ததாகவும் புகார் எழுந்தது.